Saturday, January 12, 2013

சாத்திரரும் சூத்திரரும்

சாத்திரரும் சூத்திரரும்

இன்றைக்கு தம்மை யாராவது சூத்திரர் என்று சொன்னால் கோபம் வருகிறது.
ஆனால் சூத்திரர் என்பவர் எப்படி தாழத்தப்பட்டவராக மாற்றப்பட்டார் என்பதை
இந்த கட்டுரையில் பேசப்போகிறோம்.

சத்திரியர், வைசியர், சாத்திரர், சூத்திரர், பஞ்சமர் என ஐந்து வகையாக அவரவர்
தொழிலை அடிப்படையாக வைத்து மனிதர்கள் வகைப்படுத்தப்பட்டனர்.

இதில் சத்திரியர் என்பவர் சத்தியத்தை கடைபிடித்து நாட்டை காக்கும் தொழிலை
செய்து வந்த மன்னர், படைத் தலைவர்கள், படை வீரர்கள் போன்றோராவர்.

வைசியர் எனப்படுபவர்கள் விளைபொருட்களை வாங்குதல் விற்றல் போன்ற
தொழிலை செய்து வந்தவர்கள்.

சாத்திரர் எனப்படுபவர்கள் ஆலயத்தை பராமரித்தல், சாத்திரத்தை ஓதுதல்
போன்றவற்றை செய்து வந்தவர்கள் ஆவர்.

பஞ்சமர் எனப்படுபவர்கள் அனைத்து தொழில்களிலும் உதவி செய்தவர்கள் ஆவர்.

இதில் சூத்திரர் எனப்படுபவர்கள் விவசாயம் சார்ந்த தொழில்களை செய்தவர்கள்
என்றுதான் இதுவரை நமக்கு சொல்லப்பட்டு வந்தது.

ஆனால் உண்மை சூத்திரர் எவ்வாறு சாத்திரரினும் உயர்ந்த நிலையில் இருந்து
சூழ்ச்சியால் தாழ்ந்த நிலைக்கு தள்ளப்பட்டார்கள் என்பதிலேதான் இருக்கிறது உண்மை.

உண்மையில் சூத்திரர் எனப்படுபவர்கள் யாராக இருந்தார்கள் என்று பார்த்தால்
உழவுத்தொழிலை செய்து வந்தவர்களே. இவர்களது தொழில்  உழவாக இருந்தாலும்
இவர்களது மற்றொரு தொழில் உண்மையை ஆராய்தல், அதை ஓலைச்சுவடிகளில்
எழுதி வைத்தல், அரசன் மற்றுமுள்ள அனைவருக்கும் ஆலோசனை கூறுதல் போன்றவை.
ஒரு காலத்தில் அறிவுத்துறை உழவர்களிடமே குடிகொண்டிருந்தது.

சரி சூத்திரர் என்பதற்கு பொருள் என்ன என்று ஆய்வோமானால்
கணிதத்தில் சூத்திரம் எப்படி ஆதாரமோ, எவ்வளவு முக்கியமானதோ
அவ்வளவு கூரிய அறிவுடையோராக உழவர்கள் திகழ்ந்தார்கள்.
காரணம் உழவுத் தொழில் செய்வோருக்கு கிடைத்த அதிக நேரமேயாகும்.

எந்த சாத்திரத்தின் உட்பொருளையும் உணர்ந்து அதன் உண்மைத் தன்மையை
உணர்ந்திருந்த காரணத்தால் அவர்களின் அரசனுக்கும், நீதியை வகுப்போருக்கும்
ஆலோசனை கூறத்தக்க உயர்ந்த இடத்தில் இருந்து வந்தார்கள்.

ஆனால் சாத்திரத்தை உணராமல் சாத்திரத்தை ஓதுவதையே தொழிலாக
கொண்டிருந்த சாத்திரர்கள் சூத்திரர்களின் உயர்நிலையை ஒழிக்க
சாத்திரமே உயர்ந்தது. அதன் உட்பொருளை உணர்ந்த சூத்திரர் எனப்படுபவர்
தாழ்ந்தவர் என உருவாக்கும் பொருட்டு

அதிகாரத்தில் உயர்ந்திருந்த சத்திரியர் எனப்படும் அரசர்களையும்
பொருள்  வசதி படைத்த வைசியர்களையும்
சாத்திரமே உயர்ந்தது என்று நம்ப வைத்தனர்.
அதுமட்டுமல்லாது சாத்திரத்திற்க அடுத்த உயர்ந்தவர்கள்
சத்திரியர்கள் மற்றும் வைசியர்கள் என்று பிரிவினையை
தோற்றுவித்தனர். இனி சிறந்த ஆலோசனைகளை வழங்கி வந்த
சூத்திரர்களாகிய உழவர்களை நான்காம் தர மக்களாக மாற்றி
சூத்திரர்களின் உயர்நிலையிடத்து பிரிவினை வாயிலாக
சாத்திரர்கள் வந்தார்கள்.

அதோடு மட்டுமல்லாது சூத்திரருக்கு துணைபுரிந்து வந்த பஞ்சமர்
எனப்படும் தொழிலோர் அனைவரும் தீண்டத்தகாதவர் ஆயினர்.

உயர் நிலை பெற்றிருந்த உழவுத் தொழில் எப்படி தாழ்ந்த நிலை அடைந்தது ?
உயர்நிலையிலிருந்த உழுவர் எனும் சூத்திரர் எப்படி தாழ்ந்த நிலை அடைந்தார் ?
என்பது இதன்வாயிலாக அறியலாம்.

ஆகவே சூத்திரர் என்பது கணிதத்தில் சூத்திரம் எவ்வளவு முக்கியமானதோ
அப்படியே சூத்திரர் என்பவர் அறிவில் சிறந்தவர் என்ற நிலையை மாற்றி
தாழ்ந்த வகுப்பினர் என்று ஒரு குறிப்பிட்ட இனத்தவர் காலம் காலமாக
சொல்லி சொல்லி வந்து அதை உண்மையாக மாற்ற எடுத்த முயற்சி
நம்மவர்களாலேயே ஏற்றுக் கொள்ளப்பட்டதுதான் கொடுமை.

இனியும் சூத்திரர் எனபோரும், பஞ்சமர் என்போரும் தாழ்ந்தவர் இல்லை
என்பதை தமிழினம் உணரட்டும்.

ஆகவேதான் நமது முப்பாட்டனார் திருவள்ளுவரும்
உழவனுக்கு பின்னால் இவ்வுலகம் செல்லும் என்று சொன்னது
உணவு அளிப்பவன் என்பதற்காக மட்டுமல்ல
அவன் நெல் களஞ்சியத்துடன், அறிவு களஞ்சியமாக திகழந்தான்
என்பதற்காகதான்.

உலகுக்கே உழுவை சொல்லிக் கொடுத்த தமிழினத்தின் விழாவாம்
உழவர் திருநாளில் உழவர்தம் பெருமையை எடுத்துக்காட்டவே
இக்கட்டுரையை எழுதினோம்.


அனைவருக்கும் இனிய உழவர் திருநாள் வாழ்த்துக்கள்.

Wednesday, January 2, 2013

இனி நமது தமிழினத்தின் ஆதித்தலைவனையே சரணடைவோம்

அன்பு நண்பர்களே,

வாழிய தமிழ் இனம்.

இதுவரை தமிழர்களை ஒன்றுபடுத்த பலரும் பல வழிகளில் முயன்று ஒற்றுமைக்கு பதில் வேற்றுமையே தலையெடுத்து தாண்டவமாடுகிறது. காரணம் தமிழர்களிடையே அவர்களின் அடிப்படை தன்மையை மாற்ற முற்பட்டதுதான். தமிழரின் அடிப்படை தன்மை என்ன ?

தமிழர்தம் அடிப்படை ஆன்மீகம். அதை விடு்த்து நாத்திகத்தினாலோ, அரசியல் கட்சிகளினாலோ. சாதிய அமைப்புகளாலோ. வேறு எந்த வழியினாலோ தமிழினத்தை ஒன்றுபடுத்த முடியாது என்பதை கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்ற சம்பவங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

ஆதிகாலம் தொட்டு இன்று வரை தமிழரின் தன்னிகரில்லாத தலைவனாக, தமிழரின் கடவுளாக, தமிழ் மொழியை தோற்றுவித்த நமது முருகப்பெருமான் இருந்து வருகிறார்.

ஆனால் நாம் நமது தன்னிகரில்லா தலைவனான கந்தசாமியை மறந்து விட்டு வெந்ததை தின்று விட்டு வந்ததை உளறிக்கொண்டிருப்பவர்களின் பின்னால் சென்று கொண்டிருந்தோம். பாவம் அவர்கள் தங்களையே காப்பாற்றிக் கொள்ள போராடிகொண்டிருக்கும்போது தமிழர்களை எப்படி காப்பாற்றுவார்கள்.

இவர்களையெல்லாம் நம்பி நாம் மோசம் போனது போதும்.

இனி நமது தமிழினத்தின் ஆதித்தலைவனையே சரணடைவோம்.

தமிழ்க்கடவுளாம் முருகப்பெருமானை தலைவனாக கொண்டு செயல்பட வேண்டு்ம் என்னும் நல்ல நோக்கத்தில் இறைவன் கந்தசாமியின் பெயரால் கந்த சேனை எனும் அமைப்பினை தொடங்கி தமிழினத்தை ஒருங்கினைப்போம்.

முதலில் இதை தமிழகம் முழுவதும் ஒருங்கிணைப்போம். அடுத்து உலக தமிழர்களை கந்தசாமியின் திருவருளால் ஒருங்கிணைப்போம்.

கூடிய விரைவில் இதற்கான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட உள்ளது.

உண்மையில் தமிழர் நலனில் அக்கறையும், தமிழர்களை சாதி கடந்து ஒருங்கிணைக்க வேண்டும் நல் நோக்கமும் உள்ள அன்பு உள்ளங்கள் அனைவரையும் அழைக்கின்றோம்.

அன்பு தமிழ் சொந்தம்
நக்கினம் சிவம்
ஒருங்கிணைப்பாளர்
கந்த சேனை
கைபேசி - 9994751344
மின்னஞ்சல் - nakinam@gmail.com